டெய்சி தொண்டு நிறுவனம் கிறிஸ்துமஸ் விழா :கனிமொழி பங்கேற்பு!

டெய்சி தொண்டு நிறுவனம் கிறிஸ்துமஸ் விழா :கனிமொழி பங்கேற்பு!

டெய்சி தொண்டு நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு டெய்சி தொண்டு நிறுவனத்தின் செயலாளரும் திமுக சிறுபான்மை அணி தலைவருமான வசந்தி ஸ்டான்லி தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நற்செய்தியை சி.எஸ்.ஐ சென்னை பேராயத்தின் ஆயர் ஜார்ஜ் ஸ்டீபன் வழங்கினார். ஏழை எளியோருக்கு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகளை திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வழங்கி சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *