தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.தமிழ்நாடு அரசு கலை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அறப்போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சென்னை மண்டல செயலாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜூலை, 11, 2009 இல் கல்வி தகுதி பெற்ற கெளரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி சிறப்பு தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.கெளரவ விரிவுரையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியம் 15 ஆயிரத்திலிருந்து ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ரூபாய் 43 ஆயிரத்து 200 வழங்க வேண்டும் .கல்லூரி ஆசிரியர் பணியிட மாறுதலின் போது புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் போது பணி இழக்கும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு மேற்படி மீள்பணி உடனடியாக வழங்க வேண்டும். உயர்கல்வித்துறை அமைச்சர் கடந்த 30.5.2018 சட்டமன்றத்தில் அறிவித்தபடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணிவரன்முறை செய்யப்படுவர் என்ற அறிவிப்பை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச் செயலாளர் அருணகிரி எழுச்சியுரை ஆற்றினார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் புவனேஸ்வரி, மாநில துணை தலைவர் வசந்தகுமார் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.சென்னை மண்டல தலைவர் குமார் நன்றியுரையாற்றினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ள மண்டல நிர்வாகிகள் திறளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *