தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் 12ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் தொடக்க விழா

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் 12ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் தொடக்க விழா சென்னை பெரவள்ளூர், அகரத்தில் உள்ள துறையூர் நாடார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு. பி.கே. இளமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அர்ஜுனன் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் சாந்தி,தலைமை நிலைய செயலாளர் ராமஜெயம் உள்பட நிர்வாகிகள்,கல்வியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

திரு.உ. சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அவர் தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கல்வி உரிமை மாநாட்டை திரு. பி.ராமசாமி அவர்கள் தொடங்கி வைக்க திரு. வீ.நந்தகுமார் IRS அவர்கள் கல்வி உரிமையை பற்றி சிறப்புற உரையாற்றினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சீர்மிகு ஆசிரியர் விருது மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக உழைத்து வரும் ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீர்மிகு தூய்மை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது
இதில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்,ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் திறளானோர் கலந்து கொண்டனர்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *