தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!நில அளவை களப்பணியாளர்களின் பணி விதி நடைமுறை பயன்பாட்டு உரிமையை பாதுக்காக்கவும்,
உட்பிரிவு பட்டா மாறுதலில் தற்போதைய நிலையே தொடர்ந்திடவும்,வருவாய்துறை முதன்மை செயலாளர் நிலையில் ஏற்றுக்கொண்ட நிலுவை கோரிக்கைகளுக்கு உடன் உத்தரவு வழங்கிட,இயக்குனர் வசம் உள்ள கூடுதல் இயக்குனர் பொறுப்பை உடன் வழங்கிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் காயம்பூ தலைமை தாங்கினார்.மாநில நிர்வாகிகள் இராஜேந்திரன்,முருகேசன், அண்ணாகுபேரன்,ஸ்டேன்லி,சிவக்குமார்,ரவி,நிமிலன்கிறிஸ்டோபர்,அப்பாஸ்,வரதராஜன்,முருகேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநிலச்செயலாளர் பேபி வரவேற்புரையாற்றினார்.முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கணபதி துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் ராஜா உரையாற்றினார். தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்தீபன்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ஜெயசங்கர்,தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *