தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையை நீக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் சார்பில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையை நீக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் தலைவர் ஜீ. சங்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வி.கே. பாலு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மற்றும் தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.அன்பு ராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் மற்றும் பாண்டியைச் சேர்ந்த அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், வணிக அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் டி.காமராஜ் நன்றியுரை ஆற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *