தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக்சங்கம் (டான்பா),தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம்(டாப்மா), சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்(செப்மா) ஆகியவற்றின் நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ஜி.பி. சாலையில் உள்ள ஹோட்டல் சர்மணியில்நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் தலைமை வகித்தார்.டாப்மா செயலர் ராக்கப்பன் , டாப்மா முன்னாள் தலைவர் சாமிநாதன்,செப்மா செயலாளர் டி.காமராஜ்,இணை செயலாளர் நீலமலை, டாப்மா மேலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வருகிற ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரவிருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்கக் கோரி பிளாஸ்டிக் கடைகளை மூடி போராடுவது, தடையை நீக்காத பட்சத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள்,அரசியல் கட்சிகளை கலந்தாலோசித்து மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *