தமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டலம் சார்பில் தேசிய வளர்ச்சிக்கான முக்கிய துறைகளில் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

பெரியமேடு : தமிழ்நாடு பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டலம் தங்களது செயல் வளர்ச்சிக்கான புதிய உத்திகளை கையாளவும், தேசிய வளர்ச்சியில் வங்கியின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்க சென்னை மண்டலத்தைச் சார்ந்த அனைத்து வங்கி அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயல் ரீஜென்ஸி ஹோட்டலில் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் பாங்க் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கிளையின் சுயபரிசோதனை குறைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் ஆலோசிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளுக்கு கடன் வழங்குவது பற்றியும், தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் தேசிய பொருளாதாரத்தை உயர்த்து குறித்தும் விவாதிக்கப்பட்டன. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் மூத்த குடிமகன்கள், விவசாய பெருமக்கள், சிறு, குறு,தொழில் புரிவோர், வியாபார, வாடிக்கையாளர், இளைஞர்கள் மாணவர்கள், பெண்கள் போன்றோரை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்தது.

பல்வேறு துறை சார்ந்த டிஜிட்டல் வர்த்தகம், பெருநிறுவன வர்த்தகம், சிறு, குறு தொழில் மற்றும் சில்லறை வர்த்தகம் ஏற்றுமதி பொருளாதாரம் கட்டிடத் துறை மற்றும் இதர துறைகள் சார்ந்து 5 லட்சம் கோடி டாலர்கள் வரையிலான வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் விதத்தில் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது .

பொருளாதார வளர்ச்சிக்கு கடன் வழங்குதல், கட்டிட அமைப்பு, தொழில்துறை, பண்ணை துறை, கடல் சார்ந்த வணிகம், சிறு குறு தொழில் வளர்ச்சி ,கல்விக்கடன் நுண் துறை வளர்ச்சி மற்றும் சீரமைப்பு ஏற்றுமதி கடன் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் எளிய வாழ்க்கைமுறை முத்ரா கடன் . தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மகளிர்க்கு அதிகாரமளித்தல் போன்றவையும் விவாதிக்கப்பட்டன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *