தமிழ்நாடு வன தோட்ட கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

தமிழ்நாடு வன தோட்ட கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசு காகித கூழ் மரம் நாட்டு மக்களுக்கு நன்மையா, தீமையா,என அறிவிக்க வேண்டியும்,அரசு அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவினால் தோட்டக் கழகம் அழிவு பாதைக்கு செல்லும் கழகத்தை காக்க வேண்டியும், கவனம் ஈர்ப்பு உண்ணாவிரதம் சேப்பாக்கம்,அரசு விருந்தினர் மாளிகை அருகில் மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.        உண்ணாவிரதத்தை தமிழ்நாடு வனத்தோட்ட கழக ஓய்வுபெற்ற பணியாளர் சங்க தலைவர் சபாநடேசன் துவக்கி வைத்தார்.மேலும் இதில் கந்தர்வகோட்டை வனசரக அலுவலர் ராஜேந்திரன், புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் சோலை, காரைக்குடி மண்டல மேலாளர் நேசமணி, வனத்தோட்ட ஓய்வு பெற்ற பணியாளர் சங்க பொதுச்செயலாளர் அருண், பகண்டை வனசரக அலுவலர் ராமமூர்த்தி, பண்ருட்டி வனச்சரக அலுவலர் ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *