தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் பெருந்திரள் முறையீடு!

தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் பெருந்திரள் முறையீடு!

தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுரை எழுத்தர்க்கான ஊதியம் வழங்கியது போல் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் வழங்கிடக்கோரி தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் பெருந்திரள் முறையீடு சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார்.மாநில துணை தலைவர் வெயிலுமுத்து வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.
தமிழ்நாடு ஊரக பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.பார்த்திபன் துவக்கவுரையாற்றினார்.பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்திப்பேசினர்.மாநில பிரச்சார செயலாளர் மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *