தமிழ்மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ்மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழ்மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆ.போஸ் தலைமை தாங்கினார்.மாநில நிர்வாகிகள் நல்லத்தம்பி,முருகேசன்,அன்பழகன் ஸ்டாலின்பிரபு,ரபிந்திரநாத்,வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உண்ணாவிரதத்தை மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து உரையாற்றினர்.கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச்செயலாளர் கோவிந்த ராஜு பேசினார்.PHODA மாநில தலைவர் கங்காதரன் அரசு ஊழியர் சங்க பகுதி செயலாளர் செந்தில்குமார்,மாநில பொதுச்செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.மாநில பொருளாளர் ஜான் சிம்சன் நன்றியுரையாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க தலைமை நிலையச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணியமைப்பு விதிகளில் பணி பாதுகாப்பு வழங்கிடவும் துறையில் உள்ள பணிச்சுமையினை குறைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,தாய் துறைக்கு சென்றிட விருப்ப மனு கொடுத்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,உரிய பாதுகாப்புமற்றும் வாகன வசதியின்றி இரவு நேரங்களில் ஆய்வு பணி செய்ய நிர்பந்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும்,கூடுதல் பணியிட பணிக்கு குறியீடு நிர்ணயம் செய்வதை தவிர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *