திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி, சாலையின் தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே நிலக்கரி ஏற்றி சென்ற லாரி, சாலையின் தடுப்பு சுவற்றின் மீது மோதி விபத்துநெடுஞ்சாலைத் துறை அலட்சியத்தால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. எண்ணூரில் இருந்து கும்மிடிப்பூண்டி தொழிற்சாலைக்கு நிலக்கரி ஏற்றிய லாரி ஒன்று சென்றது. திருவேங்கடபுரம் பகுதியை லாரி கடக்கும் போது பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே சாலையின் தடுப்பு சுவரின் மீது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் சாலையின் தடுப்பு சுவரும் லாரியின் பக்கவாட்டிலும் சேதமானது. லாரி ஓட்டுநர் விபத்து ஏற்பட்ட உடன் தப்பித்து ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விபத்து ஏற்பட்ட அரசுப் பள்ளியின் அருகில் வேகத்தடை, ஒளிரும் விளக்கை வைத்து, நெடுஞ்சாலை துறையினர், சாலையை பராமரிக்காததே விபத்துக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டினர். பள்ளி மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் செல்லும் இந்த சாலையை உடனே வேகத்தடை அமைத்து விபத்துக்களை கட்டுப்படுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *