திருவேற்காட்டில் ஆர்.எம்.கே.கிளப் ஹவுஸ் திறப்பு விழா- ஒ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் பங்கேற்பு

திருவேற்காட்டில் ஆர்.எம்.கே.கிளப் ஹவுஸ் திறப்பு விழா- ஒ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை : திருவேற்காடு சுந்தரசோழபுரம் ஆர்எம்கே சோழா கார்டன்சில், கிளப் ஹவுஸ் திறப்பு விழா நடந்தது. ஆர்எம்கே குழும நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்து, விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், குத்து விளக்கு ஏற்றி, கிளப் ஹவுஸை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அமைச்சர்கள் பா.பெஞ்சமின், மாபா க.பாண்டியராஜன், எம்எல்ஏக்கள் வி.அலெக்சாண்டர், சிறுணியம் பி.பலராமன், கே.எஸ்.விஜயகுமார், முன்னாள் எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் வி.மூர்த்தி, எஸ்அப்துல் ரஹீம், முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக பில்டர்ஸ் அசோசியேஷன் அகில இந்திய தலைவர் சச்சின் சந்திரா, க்ரிடாய் அமைப்பின் தமிழ்நாடு கிளை தலைவர் எஸ்.ஸ்ரீதரன், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் ஆர்.முத்துக்குமார், உடனடி முன்னாள் தலைவர் ஏ.புகழேந்தி, ஆர்எம்கே கல்வி குழுமங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவி துர்காதேவி பிரதீப், முன்னாள் நகரமன்ற தலைவர் கோலடி டி.மகேந்திரன் கலந்து கொண்டனர். விழாவில், ஆர்.எஸ்.முனிரத்தினம் கூறுகையில், ‘அனைவரின் பிரத்தியோக தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். 24 மணி நேரமும் தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பு வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. தரமான மேல்நிலை பள்ளி நடத்தி வருகின்றோம். அன்றாட தேவைகளுக்கும் குடிப்பவர்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது’
என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *