தென்னக புயல் பாதிப்பு மீட்புக் குழு சார்பில் சென்னை அண்ணா நகரில் உள்ள அரினா அரங்கத்தில் டெல்டா மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிதி மற்றும்பொருட்கள் உதவி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

தென்னக புயல் பாதிப்பு மீட்புக் குழு சார்பில் சென்னை அண்ணா நகரில் உள்ள அரினா அரங்கத்தில் டெல்டா மாவட்டங்கான தஞ்சை, நாகை, வேளாங்கன்னி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய நிதி திரட்டியும், பொருட்கள் வாங்கியும் பங்கிட்டு வழங்க தொண்டர்களை திரட்டியும் ஆலோசனைக் கூட்டம் ‘பிரிசியா மோலன் ‘ நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. புதுக்கோட்டையை சேர்ந்த பெண்மனி ஒருவர் தங்கள் ஊரில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அழிவு பற்றி கூறி கண்ணீர் வடித்தார். மன்னார்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்த்து தேவைகளை அறிந்து வந்த மருத்துவர். பானுப்பிரியா நேரு பேசினார். நடிகர் யார் கண்ணன் அவர்கள் கவிதை படித்தார். காளையோடு விளையாடிய இளைஞர்கள் இப்போது காளைகள் இறந்து கிடக்கும் போது திரண்டு வர வேண்டாமா என கேட்டார். நடிகர் ராஜேஷ் அவர்கள் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய நாம் நேரிடையாக செல்ல வேண்டும் என்றார். அடுத்து பேசிய தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலர் முனைவர் பா. இறையரசன் அவர்கள் பேசுகையில் இதுவரை திரட்டப்பட்டுள்ள நிதி ரூபாய்.70,000 க்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான தார்ப் பாய், பால் பவுடர், கை விளக்கு ( டார்ச் லைட்), குடைகள் முதலியவற்றை நாளை வண்டியில் ஏற்றி அனுப்பவுள்ளதாக கூறினார். இதில் ‘ஆக்கம்’ மதிவாணன், திருமதி.வடிவழகி, திருமதி. சசிகலா, மருத்துவர் ரேணுகா, மருத்துவர் பத்மானந்தம், பாரதிதாசன், தினேஷ் போன்றோர் பாதிக்க பட்ட இடங்களுக்கு செல்லவிருக்கிறார்கள். ‘அரினா அனிமேஷன்’ நிறுவனத்தின் தலைவர் திரு. சரவணராசா அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். நன்னன் அய்யாவின் மருகர் தமிழியக்கம் செம்மல், இயக்குநர் கவுதமனின் தந்தையார் வடமலை மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *