பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் குறித்த ஆங்கில நூல் வெளியீட்டு விழா!

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் குறித்த ஆங்கில நூல் வெளியீட்டு விழா!

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,மயக்கமா கலக்கமா,பூஜைக்கு வந்த மலரே வா,வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா போன்ற ஏராளமான மனதிற்கு இதமான பாடல்களை பாடியவர் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.
அக்காலத்தில் ஜெமினி கணேசன் படங்களில் அவர் வெளிப்படுத்தும் காதல் பூரிப்பும் சோக உணர்ச்சியும் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் இழைந்தோடும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் குறித்து டாக்டர் ரங்கநாத் நந்தியால் எழுதியிருக்கும் “மல்டி டேலன்ட்டட் சிங்கர் பி.பி.ஸ்ரீநிவாஸ்”நூல் வெளியீட்டு விழா ரஷ்யன் கலாச்சார மைய்யத்தில் நடைபெற்றது.
கிதார் மேதை பண்டிட் ஜானார்த்தன் மிட்டா வெளியிட ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் ஜெயாஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.நூலாசிரியர் டாக்டர் ரங்கநாத் நந்தியால் ஏற்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *