பாரிவேந்தர் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா…

பாரிவேந்தர் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா…

எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர்.தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் எழுதிய கவிதை நூலான “பாரிவேந்தர் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா கிண்டியில் உள்ள ரமடா ஹோட்டல், வேந்தர் அரங்கில் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ் பேராயத்தின் தலைவருமான முனைவர் இர. பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பாரிவேந்தர் கவிதைகள் நூலை பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட கவிஞர் அறிவுமதி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் பேராயத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கா மதியழகன் நன்றியுரை வழங்கினார். தமிழ் பேராயத்தின் செயலர் முனைவர் பார்ஜெய்கணேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் எஸ். ஆர்.எம். பல்கலை கழகத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் என பலர் திறளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *