பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு                 பெமிலிப்ட்  லேசர் சிகிச்சை முறை அறிமுகம் 

பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்குபெமிலிப்ட்  லேசர் சிகிச்சை முறை அறிமுகம்
பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக “பெமிலிப்ட்” என்ற புதிய லேசர் சிகிச்சை முறை சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது என
சர்வதேச பாலியல் சங்க (வாஸ்) மீடியா கமிட்டி தலைவரும், ஆகாஷ் மருத்துவமனையின் இயக்குனருமான டாக்டர். ஜெயராணி காமராஜ் கூறியதாவது:
மக்கள்தொகையில் சம அளவில் பெண்கள் இருந்தாலும், அவர்கள் ஆண்கள் பெறும் அளவுக்கு மருத்துவ சிகிச்சையைப்பெறுவதில்லை. அதற்கு காரணம் அவர்கள் முடிந்தவரை சமாளித்துக்கொள்ளலாம் என்பதும் ஒன்றாகும்.
அதிலும் குறிப்பாக பாலியல் தொடர்பான பிரச்சனைகள் பெண்களுக்கும் இருக்கின்ற போதிலும், அவர்கள் அதை வெளியே சொல்வதில்லை. அதற்கான சரியான சிகிச்சையும் எடுத்துக்கொள்வதில்லை.
சமீபத்தில் கூட பிரபல திரைப்பட நடிகை தமனா பெண்கள் தங்களது பாலியல் பிரச்சனைகள் குறித்து பேச முன்வருவதில்லை என்று கூறியிருந்தார். இது முற்றிலும் உண்மை பாலியல் பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கு சரியான பாலியல் சிகிச்சை கிடைப்பதில்லை என்ற நிலையும் உள்ளது. இந்த குறையை போக்கும் விதமாக பெண்களுக்கான பாலியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் “பெமிலிப்ட்” என்ற நவீன கருவியை இந்தியாவிலேயே முதன்முறையாக எங்கள் மருத்துவமனையில்  அறிமுகப்படுத்துகிறோம்.
பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற, இறக்கம் ஏற்படுவது இயற்கையான மாற்றம் தான். சில சமயங்களில் பெண் உறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விடும். இது வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்படக்கூடிய ஒன்றுதான். இதனால்அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படுகிறது. தம்பதியினர் இடையே இணக்கம் இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டு அது சில சமயங்களில் விவாகரத்து வரை கூட சென்றுவிடுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போது நவீன கருவி அறிமுகப்படுத்தப்படுகிறது. “பெமிலிப்ட்” என்ற இந்த கருவி மூலம் லேசர் சிகிச்சை முறை செய்யப்படும். இதனால் பெண்உறுப்பில் உள்ள திசுக்கள் புதுப்பிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் தாம்பத்ய உறவில் ஈடுபடமுடியும்.
அதேபோல் சில பெண்களுக்கு நடக்கும்போதோ, சிரிக்கும்போதோ, தும்மல் மற்றும் இருமலின்போதோ கட்டுப்பாடு இல்லாமல் அவர்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படும். அவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல தயங்குவார்கள். இந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற புதிய பெமிலிப்ட் கருவிமூலம் அளிக்கப்படும் நவீன லேசர் சிகிச்சை பெரிதும் உதவும்.
பெண்களில் பலருக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் தழும்புகள் ஏற்படும். சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு அதற்கான தழும்புகள் அவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தும். அதோடு மட்டுமன்றி உடலில் எந்த பாகத்தில் தழும்புகள் இருந்தாலும் அவற்றை பெமிலிப்ட் லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யமுடியும்.
மேற்கண்ட சிகிச்சை முறைகள் அனைத்தும் எந்தவித மயக்கமருந்தோ, அறுவை சிகிச்சையோ, மருத்துவமனையில் அனுமதியோ இல்லாமல் புறநோயாளியாகவே வந்து ஒருசில நிமிடங்களில் செய்துகொண்டு திரும்பிவிடலாம். இந்த சிகிச்சைக்கான கட்டணமும் மிகமிக குறைவு.
ஆகாஷ் மருத்துவமனையின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி பெண்களுக்கான முழு உடல் பரிசோதனை 50 சதவீத சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் ஜெயராணி காமராஜ் கூறினார்.
சர்வதேச பாலியல் சங்க பாலியல் உரிமைகுழு உறுப்பினரும், ஆகாஷ் மருத்துவமனை இயக்குனருமான டாக்டர் டி.காமராஜ் கூறியதாவது:
பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ள எங்கள் மருத்துவமனையில், அவ்வப்போது புதுப்புது நவீன மருத்துவ கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளிவிழா ஆண்டில் நடைபோட்டுவரும் ஆகாஷ் மருத்துவமனையின் புதிய கிளை, எண்.94, பெருமாள் கோவில் தெரு, கோட்டூர்புரத்தில் வருகிற 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திறக்கப்படுகிறது.
வசந்த் குழும தலைவர் எச்.வசந்தகுமார், புதிய மருத்துவமனையை திறந்துவைக்கிறார். 24மணி நேர அவசர மற்றும் எலும்பு சிகிச்சை மையத்தை திரைப்பட நடிகரும், இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன் திறந்துவைக்கிறார்.
பெண்கள் நலன் மற்றும் அழகியல் சிகிச்சை மையத்தை கடலோர காவல்படை ஐ.ஜி. பவானீஸ்வரியும், ஆகாஷ் பெர்டிலிடி மையத்தை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை இயக்குனரும், டி.ஐ.ஜி.யுமான ஏ.ராதிகாவும், டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனையை தெற்கு மண்டல ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரனும் திறந்து வைக்கிறார்கள்.
இவ்வாறு டாக்டர் டி.காமராஜ் கூறினார்.
எலும்பு, மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், நவீன மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நவீன சிகிச்சைகள் அளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இலவச மருத்துவமுகாம் ஆகாஷ் பல்நோக்கு மருத்துவமனை சார்பில் நடத்தப்படுகிறது.
கோட்டூர்புரத்தில் புதிதாக துவங்கப்படும் இதன் கிளை மருத்துவமனையில் 3 நாட்கள் அளிக்கப்படும் இலவச மருத்துவமுகாம்  வருகிற 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இம்முகாமில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், எலும்பு வலுவிழப்பு பரிசோதனை ஸ்கேன் (பி.எம்.டி. ஸ்கேன்) பொதுமக்களுக்கு இலவசமாக செய்யப்படுவதாகும். அதோடு மட்டுமன்றி அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் 5 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார். பேட்டியின்போது டாக்டர் நிவேதிதா உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *