மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகளை அறிமுகம் செய்த ஸ்ரீ சாய் டெக்னாலஜி நிறுவனம்

மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகளை அறிமுகம் செய்த ஸ்ரீ சாய் டெக்னாலஜி நிறுவனம்

 தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தென்னிந்திய மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் வினியோகஸ்தராக திகழும் ஸ்ரீ சாய் டெக்னாலஜி நிறுவனம் மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாய் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜய் கூறுகையில், வருகிற ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு பொருட்களை உபயோக்கிக்கூடாது என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் எந்த வகையான பிளாஸ்டிக் கைப்பைகளை உபயோகிக்கலாம் எந்த வகையான பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்பதுக் குறித்த ஒரு தெளிவான நிலைபாடு இல்லை. மேலும் அரசின் சட்டத்திட்டப்படி உபயோகிக்ககூடிய மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் எவை என்பதுக் குறித்தும் போதிய வழிக்காட்டுதல் இல்லை. எனவே பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், எந்தவகையான பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பதுக் குறித்து மேலும் எவை தரமான மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள், எவை தரமில்லாத மட்காத பிளாஸ்டிக் கைப்பைகள் என்பது குறித்தும் விளக்கி வருகிறோம். ஸ்ரீ
சாய் டெக்னாலஜி அறிமுகப்படுத்தி உள்ள மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் அனைத்தும் அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையான மட்கும் மற்றும் உரமாகும் பிளாஸ்டிக் கைப்பைகள் தரத்துடனும், அசலுடனும் தயாரித்து வரும் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். குறிப்பாக நம் அடுத்த சந்ததியினர் மட்காத மற்றும் உரமாகாத பிளாஸ்டிக் இல்லா நகரத்தில் வாழ நாமே வழிக்காட்டியாக இருக்க வேண்டும்
என்பதே எங்களின் பிரதானக் குறிக்கோளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *