மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட காவல் உதவியாளர் மீது சாராயம் கடத்தி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ; உதவி ஆய்வாளர் படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி.

மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட காவல் உதவியாளர் மீது சாராயம் கடத்தி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ; உதவி ஆய்வாளர் படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி.
நாகை மாவட்டம் இராதாமங்களம் அருகே கீழ்வேளூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மதுவிலக்கு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனத்தை காவலர் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், வேகமாக வந்த சாராய கடத்தல்காரர்கள் உதவி ஆய்வாளர் சுப்ரமணியனை மோதிவிட்டு தப்பி சென்றனர். பின்னர் அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் கடத்தல் காரர்களைமடக்கிப்பிடித்தனர்அப்போது போலீசாரை தள்ளிவிட்டு ஒருவர் தப்பி சென்றார் மேலும் கடத்திவரப்பட்ட 60லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், மதுரையை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து, வாகனத்தை ஓட்டிவந்த தப்பியோடிய குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலையில் படுகாயத்துடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *