பொன்னேரி அருகே போதைப்பொருளுக்கு எதிராக தனியார் கப்பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மாரத்தான் விழிப்புணர்வு பேரணி

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள தனியார் கப்பல் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போதைப் பொருட்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர் முன்னதாக இந்த விழிப்புணர்வு மாரத்தான் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த தமிழ்நாடு காவல்துறை பயிற்சி தலைவர் சாரங்கன் செய்தியாளரிடம் பேசுகையில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி எடுத்து வருவதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை போதைப்பொருள் புழக்கம் குறைவாக உள்ளதாகவும்,அதனை அறவே ஒழிக்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அனைத்து பள்ளி,கல்லூரிகளிலும், மாணவர்களிடம், போதை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கோடு தமிழக காவல்துறை தொடர்ந்து ஈடுபடும் என்றும் ஐ.ஜி. சாரங்கன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *