ராஜ்குமார் – செய்தியாளர்- கடலூர் பேருந்து நிலையம் அருகில் சுகாதாரம் இல்லாத இறைச்சிக் கடை

கடலூர் சுத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் மாட்டு இறைச்சி கடை உள்ளது. இங்கு சுகாதாரம் இல்லாமல் மாடு வெட்ட படுகிறது. இதை விட மாலை வேலைகளில் இறந்த மாடுகளை வெட்டி பதப்படுத்தி மறுநாள் காலையில் விற்கிறார்கள்.இங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.நாய்கள் அதிக அளவில் இங்கு உள்ளது இறைச்சி கழிவுகளை தின்பதற்கு வரும் நாய்களை கத்தியை கொண்டு தாக்கிவிடுகின்றனர் இதனால் அதில் காயங்களில் புழுக்கள் உருவாகி துர்நாற்றம் வீசுகின்றது அருகில் உள்ள வீடுகளுக்கு இந்த நாய் வருவதால் நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது இதை விட கொடுமை என்னவென்றால் இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு சொல்லும் குடிநீர் இணைப்பு வால்வு தொட்டி இங்கு உள்ளது இதில் இறைச்சிக்கடை கழிவுகளை கழுவுகின்றனர் அந்த மாசு பட்ட குடிநீரை மக்கள் பயன்படுத்துகிறார்கள்…
பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு காவல்துறை, மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *