மீஞ்சுர் அடுத்த வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிமேலாண்மை குழு கூட்டம்

மீஞ்சுர் அடுத்த வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிமேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியை ஜோதி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன்,கிராம அலுவலர் ரவீந்திரன், ஒன்றிய கல்விஅலுவலர் முத்துலெட்சுமி,பாவை, அசோக்லேலண்ட் மேலாளர் டி. சுரேஷ்,எம்.சுரேஷ் மற்றும் கல்வியாளர் மெய்யழகன் பள்ளி மேலாண்மைகுழு தலைவர் லட்சுமி துணைத் தலைவர் கல்பனா மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளிக்கு சுற்றுசுவர்அமைக்கவும்-மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.இதனை ஏற்றுக்கொண்ட அசோக் லேலண்ட் மேலாளர்கள் டி.சுரேஷ் ஆகியோர் உடனே இதற்க்கான வேளைகள் நாளைமுதல் தொடங்கபடும் என உறுதியளித்தனர். கல்வியாளர் மெய்யழகன் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *