மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா!

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா!

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டுக்கான 17-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மாநகராட்சி திடலில் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கி. 7-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., சத்யபாமா, எஸ்.டி.ஏ.டி., சென்னை சுங்க இலாகா, அரைஸ் ஸ்டீல் உள்பட 33 அணிகளும், பெண்கள் பிரிவில் அரைஸ் ஸ்டீஸ், ரைசிங் ஸ்டார், ஜேப்பியார் இன்ஸ்டிடியூட், உள்பட 8 அணிகளும் பங்கேற்றன.

ஆண்கள் பிரிவு நாக் அவுட் மற்றும் சூப்பர் ‘லீக்‘ முறையிலும், பெண்கள் பிரிவு ‘நாக்அவுட்’ முறையிலும் போட்டிகள் நடந்தது.

இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகளை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன்,தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா ஆகியோர் வழங்கிப் பாராட்டி பேசினர்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மேயர் ராதா கிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் எல்.கிருஷ்ணமூர்த்தி, புரவலர்கள் எத்திராஜ், ஆர். அருண்குமார், செயலாளர் எம்.கனகசுந்தரம், பொருளாளர் எம்.எம்.டி.ஏ. கோபி, துணைத் தலைவர் எஸ்.எஸ். குமார் ஆகியார் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *