ரெப்கோ வங்கியின் 50 ஆம் ஆண்டு நிறுவன நாள் பொன்விழா கொண்டாட்டம்

தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்விற்காக ஆரம்பிக்கப்பட்ட ரெப்போ வங்கியின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ரெப்கோ வங்கியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) திருமதி.ஆர்.எஸ். இசபெல்லா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசின் மறுவாழ்வுத் துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்,வீட்டுவசதி நிறுவனம் மற்றும் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி,ரெப்கோ வங்கியின் இயக்குனர்கள் எல்.முனீஸ்வர கணேசன், பி.மகாலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். ரெப்கோ வங்கியின் பொன்விழா கொண்டாட்டத்தில் முக்கிய நிகழ்வாக 50 ஆண்டு கால நினைவு விழா சிறப்பு மலர்,வங்கியின் முகநூல் பக்கம் மற்றும் 50 பிளஸ் கடன் ஆகியவை சிறப்பு விருந்தினரால் துவக்கி வைக்கப்பட்டது.பொது மேலாளர் யோக சேரன் நன்றியுரை ஆற்றினார்.இதில் வாடிக்கையாளர்கள், வங்கியின் பேரவை பிரதிநிதிகள், பணியாளர்கள், சிறப்பு பிரதிநிதிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *