ENLIGHTENED CENTRE மற்றும் tamilcode.Club அமைப்பு சார்பில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

ENLIGHTENED CENTRE மற்றும் tamilcode.Club அமைப்பு சார்பில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணி மண்டபம் வளாகத்தில் ENLIGHTENED CENTRE மற்றும் Tamilcode.Club அமைப்பு சார்பில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த தெளிவுபடுத்துதல் மைய முகாமின் நோக்கம் குறித்து பயிற்சியாளர் கே.இளவரசன் அவர்கள் விளக்கிப்பேசினார். அப்போது அவர் கூறுகையில்,சமூகத்தில் மிகவும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை,எளிய மாணவர்கள் கல்வி பற்றிய விழிப்புணர்வு பெறும் பொருட்டு தொடர்ச்சியாக கல்விச்சார்ந்த பணிகளில் ENLIGHTENED CENTRE செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அம்பேத்கர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்விக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
மென்பொருள் உருவாக்கம்,மென்பொருள் சேவை,
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் மாணவர்கள் கவனம் செலுத்தினால் கை நிறைய சம்பாதிக்கலாம்.கூடவே மனித சமுதாயத்திற்கு தேவையான புதிய கண்டுப்பிடிப்புகளை வெளிக்கொண்டு வரலாம்.சிறந்த வாய்ப்புகள் உள்ள எலக்ட்ரானிக்ஸ் துறையில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறுவதற்கு மொழி ஒரு தடையாக அமைந்திடக்கூடாது என்பதற்காக பொறியியல்,மின்னனுவியல்,மென்பொருள் தொடர்பான நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளோம். இதை மாணவர்கள் படிப்பதன் மூலம் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்றார்.இந்த முகாமில் பொறியாளர் பாலாஜி சேஷாத்ரி அவர்கள் தமிழில் எழுதிய எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களும், செய்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.மனித கழிவுகளை அகற்றும் பணிக்காக ரோபோட்டிக் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் கெனித்ராஜ் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர். ENLIGHTENED CENTRE குறித்த மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட பொறியாளர்கள் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இளவரசன்: 7299047203               கெனித் ராஜ்:9176207279           பாலாஜி சேஷாத்திரி : 9940502421

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *