பார்பிக்யூ நேஷன் உணவகம் கிளை துவக்க விழா

சென்னை போரூர் மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உணவு பிரியர்களுக்காக பார்பிக்யூ நேஷன் என்ற கிளையை மிக பிரமாண்டமாக நிறுவியுள்ளது. இது சென்னையின் 7 வது மற்றும் இந்தியாவின் 116வது மற்றும் உலகளவில் 122வது கிளை ஆகும். இந்த உணவகத்தில் உணவு பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து சிறந்த அனுபவத்தை பெறலாம் இந்த பாரம்பரிய மிக்க பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் 140 நபர்கள் வரை அமர்ந்து உண்டு மகிழலாம். ஆரஞ்ச் லோகோ மற்றும் பெயரின் மேல் மகுடத்துடன் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.பார் பிக்யூ டி.ஐ.ஒய் ( நீங்களே செய்து கொள்ளுங்கள் ) என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *